BILL GATES BIOGRAPHY IN TAMIL -short words
billgates bioraphy -tamil |
SHORT WORDS BIOGRAPHY - BILL GATES IN TAMIL
ஃமைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 35 வருடம் முடிகிறது. விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.
பில்கேட்சின் வரலாறு:
இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம் ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்,
கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான் ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான்கணினி உலகம் என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...
1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ந்தேதி அமெரிக்காவிம் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர் தாயார் பள்ளி ஆசிரியை ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார் எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத்துவங்கியது.
இரவு உணவுக்குப் பின் குடும்பமாக சேர்ந்து ஃபிரிட்ஜ் என்ற விளையாட்டை ஆடுவார்கள் எனவே ஒவ்வொரு இரவும் வெற்றிப் பெருவதைப் பற்றிய நினைப்பார் பில்கேட்ஸ் அவருக்கு 13 வயதானபோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் கொண்டார் ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார், தன் நண்பருடன் சேர்ந்து கணினியில் பல மணி நேரம் செலவிட்டு மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் ஃபில்கேட்ஸ்.
1973ல் ஹாபர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார் 2 ஆண்டுகள் கழித்து 1975ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து ஃமைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
1977ல் பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹாபர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவணம் செலுத்தத் தொடங்கினார், இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவணம் செலுத்தினர், 1981ல் IBMகணினிகளுக்கான MS-DOS என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...
அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.
மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும் அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான் ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது
IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ் அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .
அதுமட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம் அந்த இணையத்தில் உலா வர உதவும் நெட்கேப்ஸ் என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர் இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,
நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை.
என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை என்று கூறுகிறது ஒரு குறிப்பு.
1999ல் Business at the speed of thought என்ற நூலை எழுதினார் ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும் அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.
குறிப்பாக உலக சுகாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அந்த நன்கொடைப் பயன்படுத்தப்படுகிறது இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஃமைக்ரோசாப்ட்டின் தலைமை பொருப்பில் இருந்துவிட்டு அதன்பிறகு தனது 95 சதவிகித சொத்தை அறப்பணிகளுக்கு கொடுக்கப்போவதாக கூறியிருக்கிறார் உலகின் ஆகப் பெரிய பணக்காரரான ஃபில்கேட்ஸ்...
நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் கண்டிப்பாக “பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே.....
Comments
Post a Comment